திருச்சி மாவட்டம் இலால்குடி யூனியன் பஞ்சாயத்தில் செய்யப்படும், சாலை மேம்பாடு, பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, தற்போது அந்தப் பணிகளைச் செய்துவரும் ஒப்பந்தக் காரர் மனோஜ்.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஒப்பந்த வேலைக்காக பஞ்சாயத்திற்கு என்று அரசு ஒதுக்கிய எஸ்.எஸ். நிதியிலிருந்து சுமார் 65 லட்சத்தை மனோஜின் தந்தை மாணிக்கம் என்பவருடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றி பணிகள் மேற்கொண்டுள்ளார்.

cc

இவர் செய்த இந்த பணப் பரிவர்த்தனை தெரியவந்ததையடுத்து, அதிகாரிகள் வருடாந்திரக் கணக்கு வழக்கில் கண்டுபிடித்து உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இனி நடைபெறும் எந்த ஒப்பந்தங்களிலும் விண்ணப்பிக்கக்கூடாது என்று உத்தரவும் போட்டனர். ஏற்கனவே ஒரு கரும்புள்ளி இவர்மீது பதிவான நிலையில் மீண்டும் அவருக்கு எப்படி ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

Advertisment

மனோஜ் தன்னுடைய தந்தையின் பெயரில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரி மீண்டும் லால்குடி யூனியனில் செயல்படுத்தும் பணிகளை எடுத்துள்ளார். தற்போது அதில்தான் பிரச்சனை ஆரம்பித்துள் ளது. இவருக்கு ஒதுக்கப்பட்ட சிறிய பாலம் கட்டும் பணி மற்றும் குழாய்கள் பதிக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அவர் செய்துள்ள பணிகள் அனைத்தும் தரமில்லாமல் இருப்பதால், அதிகாரிகள் அதற்கான பில் தொகை ரூ 41 லட்சத்திற்கான காசோலையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருசில பகுதிகளில் ஒரு பிளாக்கில் முடிக்கப்பட்ட வேலைக்கு, மற்றொரு பிளாக்கில் செய்யாத பணிக்கு பில் எழுதி அதற்கான தொகையை எடுக்க முயற்சித்தபோதுதான் பிரச்சனை வெளியே வந்துள்ளது.

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் லால்குடி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளில் ஒருசில முறைகேடுகள் நடந்துள்ளதை அறிந்துவைத் திருக்கும் மனோஜ், ஒரு செய்தியாளரை கையில் வைத்துக்கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைச் சேகரித்து, அதில் ஒருசில அதிகாரிகள் மீது தவறு இருப்பதை அறிந்துகொண்டு அவர்கள் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்மூலம் அவருடைய பில் தொகையை வழங்கமறுக்கும் அதிகாரிகள் 25 பேரை தொடர்ந்து மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

cc

கிடப்பில் போடப்பட்டுள்ள எல்லா பில்லிலும் கையெழுத்துப் போடும் வரை வழக்கை திரும்பப்பெறப் போவதில்லை என்று கூறியுள்ளார் மனோஜ். இதனால் ஒரு ஒப்பந்தக்காரருக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறாரா?

மனோஜ் அதிகம் பயன்படுத்தும் பெயர் என்றால் "திட்ட இயக்குநர் தேவநாதன்'தான். எனவே இந்த தேவநாதனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “"நான் இங்கு பணிக்கு வரும்போதே இந்த மனோஜுக்கு 10 பில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பணிகள் தரமாக இல்லை என்பதால் நிறுத்தப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டுவதாக புகார்கள் வருகிறது. அதேபோல் ஒரு செய்தியாளரை கையில் வைத்துக்கொண்டு இருவரும் இணைந்து ஊராட்சி தலைவர், செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்ட பலரை மிரட்டிவருவதாகக் கூறுகிறார்கள்''’என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

தனக்குத் துணை வராத அதிகாரிகள், ஊராட்சித் தலைவர், செயலாளர், பி.டி.ஓ. உள்ளிட்டவர்கள் குறித்து ஒரு செய்தியாளரை கையில் வைத்துக்கொண்டு செய்திகளை வெளியிட்டு, அதிகாரிகளுக்குள்ளேயே கலகத்தை ஏற்படுத்திவிடுகிறாராம் மனோஜ். அதிகாரிகள், தலைவர்கள், செயலாளர்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவப்பெயரை ஏற்படுத்தி தன்னிடம் பணியவைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருவதால், இப்பிரச்சனையை எப்படி மாவட்ட ஆட்சியருக்கு கொண்டுசெல்வது என்பது புரியாமல் பலர் குழப்பத்தில் உள்ளனர்.

அரசு, பொதுமக்களுக்கான வளர்ச்சித்திட்ட பணிகளை வழங்குவது, வாழ்வாதாரம் உயரும் என்பதற்காகவே. அதில் இப்படிப்பட்ட ஒப்பந்த தாரர்கள் தரம் இல்லாத பணிகளைச் செய்வதும், அவர்களுக்கு அதிகாரிகள் துணைபோவதும், இன்னொரு பக்கம், நல்ல நேர்மையான அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றத் துக்கு ஆளாவதும்… அரசுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும்.

தமிழக முதல்வரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அமைச்சர்களும் இதுகுறித்து ஆராய்ந்து, தவறிருப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு ஒப்பந்தக்காரர் ஒரு மாவட்ட நிர்வாகத்தை ஆட்டிப்படைப்பது மோசமான முன்னுதாரணம் என லால்குடி மக்கள் முணுமுணுத்து வருகின்றனர்.